From VMI

Latest Events

Chengalpattu

Chengalpattu

05-Dec-2023

தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, மிக்ஜாம் புயலால் CycloneMichaung பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்.! • செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சித்தாமூர் ஒன்றிய கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில் மிக்ஜாம் புயலால் கடும் மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளாக 150 குடும்பங்களுக்கு 5-கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், போர்வை, 200 நபர்களுக்கு ரொட்டி, பால், 5 நபர்களுக்கு ஸ்டவ் மற்றும் குடைகள் ஆகியவை வழங்கப்பட்டது.!

Viluppuram

Viluppuram

03-Dec-2023

தளபதி அவர்களின் 31-வது ஆண்டு திரையுலக கலைப்பயணம்.! விழுப்புரம் மாவட்ட வானூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் உள்ள தூய்மைபணியாளர்களுக்கு மழைக்காலத்தில் பயன்படுத்தும் விதமாக ரெயின்கோட், 5-கிலோ அரிசி பைகள் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு புடவையும் 5-கிலோ அரிசி பைகளும், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகமும் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.!

Cuddalore

Cuddalore

24-Oct-2023

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு, கடலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, கடலூர் மாவட்ட ஆட்டோஓட்டுநர்கள் தொழிற்சங்க தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்களுக்கு காக்கி சீருடை, எவர்சில்வர் தட்டு, இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டது.!

Pudukkottai

Pudukkottai

15-Oct-2023

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு, புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மக்கள் இயக்க வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இயக்க சொந்தங்கள் பயன்பெறும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கி வைக்கப்பட்டது.!

NorthChennai

North Chennai

16-July-2023

தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு.! வடசென்னைவடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 1400 மாணவ, மாணவிகளுக்கு நேற்று சுமார் 2 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகம், பேனா, பென்சில், எழுது பொருட்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் கை பை ஆகியவை வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ChengalpattuWest

Chengalpattu West

10-July-2023

தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டுமேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தாம்பரம் மத்திய பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நேற்று 100 குடும்பங்களுக்கு அரிசி பைகள், 100 பெண்களுக்கு புடவை, 100 மாணவ மாணவிகளுக்கு புத்தக பை, 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, 25 கொத்தனார்களுக்கு கட்டுமான கருவிகள் ஆகிய நலத்திட்ட உதவிகளும், சிட்லப்பாக்கம் பகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பெண்களுக்கு புடவை மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

chennaiEast

Chennai East

01-July-2023

தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னைகிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆவடி நகர தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஏற்பாட்டில் ஆவடி தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 1 நபருக்கு கன்றுக்குட்டி, 1 நபருக்கு ஆட்டோ முன்பணம், 1 நபருக்கு கணினி, 5 பெண்களுக்கு தையல் இயந்திரம், 5 நபர்களுக்கு கேஸ் ஸ்டவ், 50 நபர்களுக்கு எவர்சில்வர் பாத்திரம், 100 குடும்பங்களுக்கு அரிசி பைகள், 200 பெண்களுக்கு புடவை மற்றும் 200 நபர்களுக்கு வேட்டிகள், 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா பென்சில் மற்றும் மரக்கன்றுகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை திரைப்பட நடிகர் #ஶ்ரீநாத் அவர்களுடன் இணைந்து வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Viluppuram

Viluppuram

28-Jun-2023

தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு, விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, 5 பெண்களுக்கு தையல் இயந்திரம், 149 பெண்களுக்கு புடவை, 148 நபர்களுக்கு வேட்டி மற்றும் 149 குடும்பங்களுக்கு அரிசி பைகள் ஆகிய நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர், கள்ளக்குறிச்சி அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

chennaisuburb

Chennai Suburb

23-Jun-2023

தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னைபுறநகர் மாவட்ட தலைமை/இளைஞரணி தலைமை/மகளிரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சென்னை நீலாங்கரையில் நேற்று இரத்ததானம், கண் சிகிச்சை முகாம் நடைபெற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Namakkalfn

Namakkal East - Tiruchengode

18-Mar-2023

தளபதி @actorvijay அவர்களின் உத்தரவின்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திருச்செங்கோடு தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் நேற்று திருச்செங்கோடுக்கு உட்பட்ட அனைத்து அணிகள் சார்பாக 1 நபருக்கு புதிய #ஆட்டோ, 200 நபர்களுக்கு அரிசி, 250 பெண்களுக்கு சேலை மற்றும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட சுமார் 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.! மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகர, ஒன்றிய, பகுதி, கிளை மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

VadaChennaiEastVarisu

Vada Chennai East - Varisu

09-Jan-2023

பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நமது தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தை முன்னிட்டு வட சென்னை (கிழக்கு) மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இராயபுரம் பகுதியில் உள்ள 500 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி,நெய் ஏலக்காய்,வெள்ளம்,முந்திரி,திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு,புடவை ஆகியவை வழங்கப்பட்டது.!

GoldRing

Gold Ring

09-Jan-2023

பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நமது தளபதி விஜய் அவர்களின் வாரிசு திரைப்படத்தை முன்னிட்டு வட சென்னை (வடக்கு) மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அயனாவரம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.!

viluppuram

AUG 15th Viluppuram

15th-Aug-2022

75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் மாத்தூர் கிளை மன்ற தலைவர் செல்வமணி ஏற்பாட்டில் தேசியக்கொடியினை யேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி, ஒரு நபருக்கு மாடு, இரு நபர்களுக்கு ஆடு, 100 நபர்களுக்கு புடவை மற்றும் குடம், ஐந்து நபர்களுக்கு விளையாட்டு பொருட்கள், ஒரு அணியினருக்கும் உடற்பயிற்சி கருவிகள், மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில் பேனா, மரக்கன்றுகள் மற்றும் 400 பேருக்கு உணவு ஆகியவைகளை அகில இந்திய பொதுச் செயலாளர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட தலைவர் குஷி மோகன்,வானூர் ஒன்றிய தலைவர் முருகையன்,மாத்தூர் கிளை செயலாளர் ஐயனார்,ஆலோசகர் செல்வம்,பாலசுந்தரம், து.தலைவர் சரண், பாலமுருகன், பார்த்திபன், அசோக், ஐயப்பன்,வினோத், சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

bangalore

Bangalore Welfare Activities

07th-Aug-2022

தளபதி அவர்களின் உத்தரவின்படி, கர்நாடகா மேற்கு மாநில தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பாக, மாநில தலைவர் திரு.ராஜா அவர்கள் தலைமையில் இன்று பெங்களூரில் நடைபெற்ற 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் திரு தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி ஆனந்து அவர்கள் குக்கர், புடவை, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள்,வாக்கிங் ஸ்டிஸ்க் மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.

thanjavur

Thanjavur District 1000th day - Vilaiyilla virundhagam

01th-Aug-2022

தளபதி அவர்களின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்ட தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் விலையில்லா விருந்தகம் 1000வது நாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் கலந்துகொண்டு மதிய உணவினை வழங்கினார்.

official

Official Announcement

06-July-2022

தளபதி அவர்களின் நல்லாசியுடன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தளபதி குருதியகம் செயலி, யூடியூப் சேனல் மற்றும் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் அனைத்து மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.